காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில மேலும் மூவருக்கு கோவிட் தொற்று
மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் மேலும் மூவருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளதாகச் சுகாதார தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
இவர்களுள் ஒரு பொலிஸ் உத்தியோகத்தரும், இரு சிவில் பாதுகாப்பு படை வீரர்களுமாவர்.
இம்மாத ஆரம்பத்தில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த 32 பொலிஸாருக்கு கோவிட் தொற்று உறுதியானதையடுத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் கோவிட் தொற்றினால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதன்போது,கடமையிலிருந்த ஏனைய பொலிஸ் உத்தியோகதர்கள் சுயதனிமைப்படுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
மேலும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கோவிட் தொற்று உறுதியானதால் பொலிஸ்
நிலையத்தின் பணிகள் மட்டுப்படுத்தப்பட்டளவில் இடம்பெற்று வருகின்றன.

30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri