யாழில் திருமண வீடொன்றில் மாப்பிள்ளைத் தோழனுக்கு கோவிட் தொற்று
யாழ்ப்பாணம் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்து கொண்ட 38 குடும்பங்களை சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.
கோப்பாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள ஜே - 276 கிராம சேவையாளர் பிரிவில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் குறித்த பதிவு திருமண நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாக இருந்த மணமகளின் சகோதரனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மணமக்கள் குடும்பத்தினர் உள்ளிட்ட 38 குடும்பங்களை சேர்ந்த 56 நபர்கள் அடையாளம் காணப்பட்டு சுகாதார பிரிவினர் தனிமைப்படுத்தியுள்ளனர்.
மேலும், குறித்த திருமண நிகழ்வில் கலந்து கொண்டிருந்த மணமகனுடன் கடமையாற்றும் 08 பொலிஸ் உத்தியோகஸ்தர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

நாளை முதல்... ஐரோப்பிய ஒன்றியத்துக்கு பயணிக்கும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கிய செய்தி News Lankasri

இந்த புகைப்படத்தில் விஜய்யுடன் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று உங்களுக்கு தெரியுமா? இதோ பாருங்க Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan

இது என்ன ஸ்கூலா.. எழுந்து நிற்காதது ஒரு பிரச்சனையா? விஜய் சேதுபதியை திட்டும் நெட்டிசன்கள்! Cineulagam
