சீனாவில் இருந்து கொத்து கொத்தாக வெளியேறும் மக்கள்
கோவிட் தொற்று பரவல் சற்று குறைந்ததையடுத்து, சீனா தளர்வுகளை அறிவித்ததுள்ளது.
இந்நிலையில் சீனாவிற்கு செல்லும் பயணிகளுக்கான தனிமைப்படுத்தல் போன்ற கட்டுப்பாடுகள் ரத்து செய்ததை அடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்தது.
இதனை தொடர்ந்து சீனாவின் குடியேற்றப் பணியகம் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய சீனாவில் ஜனவரி 8 ஆம் திகதியிலிருந்து 12 ஆம் திகதிக்கு இடையில் மாத்திரம் தினமும் சுமார் 4,90,000 பயணிகள் வெளியேறியுள்ளதாக அந்நாட்டின் குடியேற்றப் பணியகத்தின் அதிகாரி தெரிவித்துள்ளார்.
கோவிட் கட்டுப்பாடு தளர்த்தல்
இது தொடர்பில் மேலும் அவர் கூறுகையில்,“இது சீனாவின் கோவிட் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தைவிட 48.9 சதவீதம் அதிகமாகும்.
ஆனால் 2019ம் ஆண்டு அளவுகளில் இது 26.2 சதவீதம் மாத்திரமே இருந்தது.
அதாவது 4,90,000 எண்ணிக்கையில், 2,50,000 பயணிகள் சீனாவிற்குள் நுழைந்துள்ளதுடன், 2,40,000 பயணிகள் சீனாவில் இருந்து வெளியேறியுள்ளனர்.”என தெரிவித்துள்ளார்.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
