புதிய ”கோவிட் கொத்தணிகள்” கண்டறியப்பட்ட பகுதிகளை தனிமைப்படுத்தும் திட்டம் இல்லை- சுகாதார அமைச்சு
புதிய ”கோவிட் கொத்தணிகள்” கண்டறியப்பட்ட எந்தப் பகுதியையும் தனிமைப்படுத்த உடனடித் திட்டம் எதுவும் இல்லை என்று சுகாதார அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் நாட்டில் வைரஸ் பரவுவதை தடுப்பதே முதல் நடவடிக்கை என சுகாதார அமைச்சின் பேரிடர் தயார்நிலை மற்றும் பதிலளிப்பு பிரிவு தலைவர் வைத்திய கலாநிதி ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
காலி, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்கள் உட்பட குறைந்தது ஐந்து மாவட்டங்களில் புதிய கொவிட் கொத்தணிகள் தோன்றியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.
எனவே அனுமதி பெறாத நிகழ்வுகளை நடாத்துவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என ஹேமந்த ஹேரத் கோாியுள்ளார்.
சில பகுதிகளில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டங்களே புதிய கோவிட் கொத்தணிகள் தோன்றுவதற்கு வழிவகுத்தன என்று அவர் கூறியுள்ளார்
இவ்வாறான ஒன்றுகூடல்கள் தவிர்க்கப்படுமானால் நாட்டை மீண்டும் மூட வேண்டிய நிலை ஏற்படாது எனவும் கலாநிதி ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்

உள்ளூராட்சிசபை தேர்தலும் தமிழ் தேசியமும் 2 நாட்கள் முன்

அமெரிக்கா-துருக்கி AMRAAM ஏவுகணை ஒப்பந்தம்: இந்தியாவின் பாதுகாப்பிற்கு புதிய அச்சுறுத்தலா? News Lankasri
