வாழைச்சேனையில் அன்டிஜன் பரிசோதனையில் நான்கு பேருக்கு கோவிட்
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் நான்கு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன், முதலாவது கோவிட் மரணம் நேற்று பதிவாகியுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார்.
குறித்த பரிசோதனைகள் இன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தில் கடமையாற்றும் ஊழியர்கள் மற்றும் வெளிநபர்கள் 25 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் மீன்பிடித்துறைமுகத்தில் கடமையாற்றும் ஊழியர் ஒருவருக்கும், வெளி நபர்கள் மூவருக்கும் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முதலாவது கோவிட் மரணம் இடம்பெற்ற நிலையில், முதலாவதாக மரணித்த ஓய்வுபெற்ற 63 வயதுடைய பெண் வைத்தியருடன் நேரடி தொடர்புடையவர்கள் 16 பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.
இதன் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார்.
குறித்த பி.சி.ஆர். பரிசோதனையில் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோவிட் தொற்று அதிகரித்துக்
காணப்படும் நிலையில், மக்களின் பாதுகாப்பு கருதி தொடர்ச்சியாக பி.சி.ஆர். பரிசோதனை
மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் என்பன இடம்பெற்று வருகின்றன.



