ரணிலின் திடீர் தீர்மானத்தின் பின்னாலுள்ள மர்மம்! குழப்பத்தில் அநுர அரசு
முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்க விரைவில் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.
இவ்வாறான நிலையில், கடந்த சில மாதங்களின் பின்னர் கடந்த 11ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூடிய போது, ரணில் எப்போது நாடாளுமன்றம் செல்வார் என்பதை அறிந்து கொள்வதிலேயே உறுப்பினர்கள் ஆர்வமாக இருந்தனர்.
பல்வேறு கலந்துரையாடல்களுக்கு மத்தியில், சிலர் நேரடியாகவே, சேர், நீங்கள் எப்போது நாடாளுமன்றம் செல்லப் போகிறீர்கள் என கேட்டபோதிலும், ரணில் அதற்கு உடனடியாகப் பதிலளிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சமகால அரசாங்கம்
எனினும், பலரும் தொடர்ச்சியாக இதே கேள்வியைக் கேட்கத் தொடங்கியதும் ரணில் சற்று வித்தியாசமான பதிலளித்துள்ளார்.

கடந்த தேர்தலில் மக்களை தன்னை வேண்டாம் என வாக்களிக்காத நிலையில், தான் எவ்வாறு நாடாளுமன்றம் செல்வது என ரணில் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களால் தெரிவு செய்யப்பட்ட சமகால அரசாங்கம் தமது பணியை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லட்டும் என ரணில் இனதபோது தெரிவித்துள்ளார்.
எனினும், கடந்த 2022ஆம் ஆண்டு கோட்டாபயவின் அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதற்கு சற்று முன்னர் கூட ரணில் இவ்வாறானதொரு கதையை கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Box office: 17 நாட்களில் பிளாஸ்ட் திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா, முழு விவரம் இதோ Cineulagam