கர்ப்பிணி தாய்மார்களிடையே கோவிட் தொற்றுகள் குறைந்துள்ளது - சித்ரமாலி டி சில்வா
கடந்த இரண்டு வாரங்களில் கர்ப்பிணித் தாய்மார்களிடையே கோவிட் தொற்றுகள் குறைந்துள்ளதாக குடும்ப சுகாதார பணியக பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா கூறியுள்ளார்.
இலங்கையில் இதுவரை சுமார் 7,000 கர்ப்பிணித் தாய்மார்கள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைத்த அவர், இலங்கையில் இதுவரை கோவிட் காரணமாக 55 கர்ப்பிணித் தாய்மார்களின் இறப்புகள் பதிவாகியுள்ளன.
இதேவேளை இதுவரை 90% க்கும் மேற்பட்ட கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கோவிட் தடுப்பூசிகள் கிடைத்துள்ளன. எனவே அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களும், தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
இலங்கையில் இரண்டு அளவு கோவிட் தடுப்பூசிகளைப் பெற்ற கர்ப்பிணி தாய்மார்கள் எவரும் இறக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Bigg Boss: அன்று பிக்பாஸாக இருந்தவர் இன்று போட்டியாளராக வந்தது தெரியுமா?... இதுவரை தெரிந்திடாத உண்மை Manithan
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam