இலங்கையில் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் 20000 கோவிட் இறப்புகள் பதிவாகலாமென எச்சரிக்கை
இலங்கையில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தோல்வியடைந்தால் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்தில் கோவிட் இறப்புக்கள் 20,000 வரை உயரலாமென்ற கருத்தை முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவின் வோசிங்டனை தளமாகக் கொண்ட பல்கலைக்கழகம் ஒன்றின் ஆய்வைக் கோடிட்டு அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் மங்கள சமரவீர அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மேலும்,
உலகளாவிய கோவிட் தொற்று தொடர்பில் குறித்த அமெரிக்க பல்கலைக்கழகம் ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டிருக்கிறது. எனவே அந்த பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கையை இலங்கை கவனத்திற் கொண்டு கோவிட் பரவலை தடுக்க வேண்டுமென மங்கள சமரவீர வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை வோசிங்டன் பல்கலைக்கழகத்தின் அறிக்கையை கருத்திற் கொண்டே அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் கோவிட்டை வெற்றிகரமாக கட்டுப்படுத்தியுள்ளன.
எனவே இலங்கை இந்த நாடுகளை முன்னுதாரணமாகக் கொண்டு செயற்பட வேண்டுமென மங்கள சமரவீர கோரியுள்ளார்.
இதற்கிடையில் இலங்கை தமது சனத்தொகையில் 70 வீதமானோருக்கு தடுப்பூசிகளை
உடனடியாக செலுத்துவதன் மூலம் பேரழிவை தடுக்க முடியும் என குறிப்பிட்டுள்ள
மங்கள சமரவீர இதற்காக வோசிங்டன் பல்கலைக்கழகத்தின் ஆய்வு அறிக்கையை
கோடிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 11 மணி நேரம் முன்

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
