மட்டக்களப்பில் ஐந்து கடற்படையினருக்கு கோவிட் தொற்று உறுதி
மட்டக்களப்பு கல்லடி கடற்படை முகாமில் 5 கடற்படை வீரர்களுக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து மாவட்டத்தில் 812 கோவிட் தொற்றாளரகல் உயர்வடைந்துள்ளதுடன் இதுவரை 8 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தில் தொடர்ந்து பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுத்துவரும் நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை (14) கல்லடி கடற்படை முகாமைச் சேர்ந்த 5 பேருக்கு கோவிட் தொற்று பி.சி.ஆர் பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தநிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை 812 கோவிட் தொற்றாளர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். 8 மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 731பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளனர். 73 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே பொதுமக்கள் தொடர்ந்து சுகாதார அமைச்சின் சுகாதார வழிமுறைகளைக் கடைப்பிடித்து அவதானமாகச் செயற்படுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
ஜேர்மனியில் தொழிற்சாலைகள் மூடப்படுவதால் மற்றொரு ஐரோப்பிய நாட்டிற்க்கு அதிகரிக்கும் வணிக வாய்ப்புகள் News Lankasri
கலவையான விமர்சனங்கள்.. அவதார் 3 இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் எவ்வளவு? பாக்ஸ் ஆபிஸ் விவரம் Cineulagam