வயிற்று வலி காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு கோவிட் தொற்று
திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வயிற்று வலி காரணமாக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்ட இளைஞனுக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞருக்கு இன்று (30) பிற்பகல் மேற்கொள்ளப்பட்டு அன்டிஜன் பரிசோதனையின் மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டவர் திருகோணமலை-தம்பலகாமம் -சிராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த (20 வயது) இளைஞர் ஆவார்.
குறித்த இளைஞர் தற்பொழுது திருகோணமலை பொது வைத்தியசாலை விபத்து சேவைப் பிரிவில் உள்ள தனி அறைக்குள் வைக்கப்பட்டு வயிற்று வலிக்குச் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும், இதனையடுத்து இவரை கோவிட் இடைநிலை சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் விடயத்துக்குப் பொறுப்பான வைத்திய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இவருடன் தொடர்புடையவர்களை
தனிமைப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.