ஆறு பொலிஸாருக்கு கோவிட் தொற்று உறுதி
கொழும்பு புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட 6 பேருக்கு கோவிட் -19 வைரஸ் தொற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காய்ச்சல் மற்றும் இருமல் ஆகிய நோய் அறிகுறிகள் காரணமாக நாராஹென்பிட்டி பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போக்குவரத்து பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஆகியோருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர்கள் கோவிட் -19 தொற்றாளர்கள் என அடையாளம் காணப்பட்டதாகப் புறக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இவர்களுடன் கடமையாற்றிய 11 பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் சுய தனிமைப்படுத்தலுக்காக பொலிஸ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கு நடத்தப்பட்ட ரெப்பீட் என்டிஜன் பரிசோதனையில் நான்கு பொலிஸ் உத்தியோகஸ்தர்களுக்கு கோவிட் தொற்றி இருப்பது கண்டறியப்பட்டது எனவும் அந்த பொலிஸ் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.