பருத்தித்துறை வைத்தியசாலையில் உயிரிழந்த பெண்ணுக்கு கோவிட் தொற்று உறுதி
பருத்தித்துறையில் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் அவருக்கு கோவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
திடீரென சுகயீனம் ஏற்பட்ட நிலையில் அவர் நேற்றுமுன்தினம் இரவு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
துன்னாலை தெற்கு, கரவெட்டியைச் சேர்ந்த 45 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த நிலையில் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு நேற்றைய தினம் சென்ற மரண விசாரணை அதிகாரி சதானந்தன் சிவராஜா (Sadanandan Sivarajah) விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் உடற்கூற்று பரிசோதனைகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.





கணவர் இறந்த பின்னரும் தாலியுடன் இருக்கும் பிரியங்கா- அவ்வளவு பிரியம்.. நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
