கோவிட் மாத்திரைகள் தொடர்பில் ராஜாங்க அமைச்சர் கூறிய பொய்
கோவிட்19 பெருந்தொற்றை தடுப்பதற்கான வாய் வழி வில்லை (Tablet) ஒன்றை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன வெளியிட்ட கருத்து பொய்யானது என தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டில் தற்பொழுது கோவிட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் உலக சுகாதார ஸ்தாபனம் மற்றும் இலங்கை ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை ஆகியனவற்றின் அனுமதியை பெற்றுக்கொண்ட தடுப்பூசிகள் பயன்படுத்தப்படுகின்றது.
இந்த நிலையில் அண்மையில் பிரித்தானியாவில் உற்பத்தி செய்யப்பட்ட மொல்னபிரவீர் என்னும் கோவிட் வில்லைக்கு இலங்கையில் அனுமதி வழங்கப்பட்டது என கடந்த 15ம் திகதி ஊடகங்களிடம் அமைச்சர் பேராசிிரியர் சன்ன ஜயசுமன கூறியிருந்தார். எனினும், இந்த தகவல் பிழையானது என ராஜாங்க அமைச்சர் டொக்டர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
இலங்கையில் குறித்த கோவிட் வில்லையை பயன்படுத்துவதற்கு கோவிட் கட்டுப்பாட்டு செயலணி
மற்றும் ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை என்பன இதுவரையில் அனுமதி வழங்கவில்லை
எனவும் எதிர்காலத்தில் அனுமதி வழங்கப்படலாம் எனவும் டொக்டர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே ஊடகங்களிடம் நேற்று தெரிவித்துள்ளார்.