ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு உயிரை பறித்த கோவிட்! உலக சுகாதார அமைப்பு வெளிட்ட முக்கிய அறிவிப்பு
கோவிட் 19 இன் பரவல் இனி உலகளாவிய பொது சுகாதார அவசரநிலை அல்ல என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.
"உலகளாவிய பொது சுகாதார அவசரநிலைக் குழு 15 வது முறையாக நேற்று (04.05.2023) கூடி, பொது சுகாதார அவசரநிலைக்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு தனக்கு பரிந்துரைத்ததாக உலக சுகாதார அமைப்பின் தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய சுகாதார அவசரநிலை அல்ல
“எனவே கோவிட்19 ஐ உலகளாவிய சுகாதார அவசரநிலை அல்ல என அறிவிப்பதில் மிகுந்த நம்பிக்கை உள்ளது. இருப்பினும், உலகளாவிய சுகாதார அச்சுறுத்தலாக கோவிட் 19 இல்லையென்று அர்த்தமல்ல எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்ததாவது,
ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு உயிர் மரணம்
“கடந்த வாரம், கோவிட் 19 ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒரு உயிரைக் கொன்றது, அது நமக்குத் தெரிந்த இறப்புகள் தான், நாம் பேசுவது போல், உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான மக்கள் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் தங்கள் உயிருக்காக போராடுகிறார்கள்.
மேலும் மில்லியன் கணக்கானவர்கள் கோவிட் 19க்கு பிந்தைய நிலையின் பலவீனமான விளைவுகளுடன் தொடர்ந்து வாழ்கின்றனர்” என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சுட்டிக்காட்டியுள்ளார். #
You may like this Video

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
