வவுனியா நகரின் பல பகுதிகளில் கோவிட்-19 தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுப்பு
நாடளாவிய ரீதியில் கோவிட் -19 தொற்றின் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் வவுனியாவில் அதனைக் கட்டுப்படுத்தும் முகமாக வன்னி இராணுவ தலைமையகத்தினால் தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று (28.04.2021) காலை 8.00 மணியளவில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்படும் பகுதியான வவுனியா பஜார் வீதி, இலுப்பையடி சந்தி, மொத்த மரக்கறி விற்பனை மையம், குடியிருப்பு வீதி, ஹொரவப்பொத்தானை வீதி, புதிய பேருந்து நிலையம், கண்டி வீதி என்பவற்றில் தொற்று நீக்கும் நடவடிக்கை இடம்பெற்றிருந்தது.
குறித்த பகுதிகளிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு முன்பாக நகரசபை தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டதுடன், நடைபாதைகள் போன்றவற்றிற்கு இராணுவத்தினரால் தொற்று நீக்கி மருந்தும் வீசப்பட்டது.






சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
