கோவிட்டை ஒழிக்க ஆளும் கட்சி, எதிர் கட்சியினரை ஒன்றிணையுமாறு ஆதிவாசிகள் கோரிக்கை
இலங்கையில் கோவிட் தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று ஆதிவாசிகள் தலைவர் ஊறுவரிகே வன்னியலத்தோ தெரிவித்தார்.
நாட்டின் தற்போதைய கோவிட் தொற்று தொடர்பில் நேற்று மொனராகலையில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"கட்சிகள், நிறம், இனங்கள், மதங்கள் மற்றும் அரசியல் வேறுபாடுகளை மறந்து நாட்டுக்காக உழைப்பது இந்த நேரத்தில் மிகவும் முக்கியமானது. இருப்பினும், எதிர்க்கட்சியினர் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது, கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்கு அரசு எடுத்த ஒரு சில நடவடிக்கைகள் தொடர்பாக கடுமையாக விமர்சித்திருந்தனர்.
இதில் ஐக்கிய மக்கள் சக்தி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார, கொரோனாவுக்கு இராஜாங்க அமைச்சர் ஒருவர் இறந்தாலும் அவரிடம் பணம் இல்லை. எனவே, அதற்கான பணத்தைச் செல்வந்தர்கள் வழங்குவதற்கு முன்வருமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனிடையே, மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையில், கோவிட் தொற்றுக்கான தீவிர அறிகுறிகள் ஏதும் இல்லை என்றால் வீட்டில் இருக்குமாறு என்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுவிட்டோம்.
எனவே, நான் தற்போது வீட்டில் இருக்கின்றேன். வீட்டிலேயே மருந்துகளைப் பெறுவதற்கான முறை என்ன? உணவுப் பொருட்களை பெறும் முறை என்ன? என்றும் கேள்வி எழுப்பியிருந்தார். இப்படி முரண்படுவதை ஆளும் - எதிரணியினர் நிறுத்த வேண்டும்.
கோவிட்டை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய நேரம் வந்துவிட்டது. இதை அனைவரும் உணர்ந்து செயற்பட வேண்டும்" - என்றார்.

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam
