அவுஸ்திரேலியாவில் தண்டனை பெற்ற போதும் புன்னகைப் பூத்த ”சின்ன பெண் தீவிரவாதி”
ஐஎஸ்ஐஎஸ் சிந்தாந்தத்தில் ஈர்க்கப்பட்டு எவரையாவது கொலை செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் அவுஸ்திரேலியாவுக்கு வந்த ”சின்ன பயங்காவாதி” என்றழைக்கப்படும் பங்களாதேஸ் மாணவி இரண்டாவது முறையாகவும் மேற்கொண்டு கொலை முயற்சிக்காக மேலதிக சிறைத்தண்டைனையை பெற்றுள்ளார்.
26 வயதான மொமீனா ஷோமா (Momena Shoma) 2018 ஆண்டு பெப்ரவரி முதலாம் திகதியன்று அவுஸ்திரேலியாவுக்கு வந்து 8 நாட்களில் சமையலறை கத்தியினால் ரொஜர் சிங்காரவேலு என்பவரை கத்தியால் குத்த முற்பட்டபோது கைதுசெய்யப்பட்டார்.
இதற்காக அவருக்கு 42 வருடங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
இந்தநிலையில் 2020 ஒக்டோபர் 30ஆம் திகதியன்று சிறைச்சாலைக்குள் கைதியாக இருந்த மற்றும் ஒரு பெண்ணை கத்தரிக்கோலால் குத்த முற்பட்டுள்ளார்
இந்த வழக்கு இன்று அவுஸ்திரேலிய உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது மொமீனா ஷோமாவுக்கும் மேலும் 6 ஆண்டுகள் சிறைத்தண்டனை நீடிக்கப்பட்டுள்ளது.
தண்டனை நீடிக்கப்பட்ட நிலையில் வெளியில் வந்த மொமீனா ஷோமா இலேசான புன்னகையுடன் சிறைக்கு சென்றதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்த 6 ஆண்டு சிறைத்தண்டனையின் பின்னர் அவர் 2054 ஆம் ஆண்டில், தமது 72 வயது வயதில் தண்டனையில் இருந்து விடுதலை பெறுவார்



இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
