நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக நீதிமன்ற பிடியாணை
வழக்கு விசாரணைக்கு சமூகமளிக்காத நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட ஏழு பேருக்கு எதிராக கருவாத்தோட்டம் பொலிஸாரினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு இன்று (13.03.2023) நீதிமன்றுக்கு அழைக்கப்பட்டது.
இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் பிடியாணை பிறப்பித்துள்ளார்.
நீதிமன்ற பிடியாணை
கடந்த 2016ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் இளவரசர் சைட் அல் ஹுசைன் இலங்கைக்கு விஜயம் செய்த போது, பிரதிவாதிகள் கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அலுவலகத்திற்கு முன்பாக வீதிகளை மறித்தும், பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர்.
இந்த வழக்கு தொடர்பில் இன்று நடைபெறும் விசாரணைக்கு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட்ட போது, சமூகமளிக்கத் தவறிய காரணத்தினால் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவுக்கு பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 19ஆம் திகதிவரை ஒத்திவைப்பு
குறித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஜயந்த சமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர் மொஹமட் முஸ்ஸம்மில், தேசிய சுதந்திர முன்னணி உறுப்பினர்களான வீரகுமார திஸாநாயக்க, பியசிறி விஜேநாயக்க மற்றும் ரொஜர் செனவிரத்ன ஆகியோர் பிரதிவாதிகளாக உள்ளனர்.
மேலும், இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

சிலை அரசியல் : அறிவும் செயலும் 2 நாட்கள் முன்

மைனர் வேட்டி கட்டி பாடலுக்கு குத்தாட்டம் போட்ட இலங்கை குயின்! கமண்ட்டுகளை அள்ளி குவிக்கும் காட்சி Manithan

நேட்டோவில் இணைந்தால்.., இந்த இரு ஐரோப்பிய நாடுகள் எங்கள் இலக்காக மாறும்! ரஷ்யா கடும் எச்சரிக்கை News Lankasri

மரணத்தில் முடிந்த உல்லாசம்... லண்டன் மாணவி தொடர்பில் வெளிநாட்டு கோடீஸ்வரரின் மகன் ஒப்புதல் News Lankasri

56 வயதாகும் நடிகை நதியாவா இது?- புகைப்படம் பார்த்து இந்த வயதிலும் இப்படியா, ஆச்சரியத்தில் ரசிகர்கள் Cineulagam
