மேர்வின் சில்வா கைது தொடர்பில் நீதிமன்றத்தின் உத்தரவு
முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா உள்ளிட்ட இருவரை எதிர்வரும் மார்ச் மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
களனி பிரதேச சபைக்குச் சொந்தமான காணியை தனியாருக்கு விற்பனை செய்வதற்காக போலி ஆவணங்களை தயாரித்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் நேற்றிரவு(5) அவர் கைது செய்யப்பட்டார்.
அவர் இன்று(6) மாலை மஹர நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
75 மில்லியன் ருபாய் மோசடி
இதேவேளை, குறித்த காணியை விற்பனை செய்ய போலி ஆவணங்களைத் தயாரித்து 75 மில்லியன் ருபாய் மோசடி செய்ததற்காக மேலும் ஆறு பேர் இன்று கைது செய்யப்பட்டனர்.
அவர்களில் மேர்வின் சில்வா உள்ளிட்ட இருவரையே மார்ச் மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பிரம்மாண்டமான பிக்பாஸ் புதிய சீசனிற்கு இந்த இளம் நடிகர் தான் புதிய தொகுப்பாளரா?.. அடடே சூப்பர் Cineulagam
