டீச்சர் அம்மாவுக்கு சார்பாக வழங்கப்பட்ட நீதிமன்ற தீர்ப்பு
'டீச்சர் அம்மா' என்று பிரபலமாக அறியப்படும் இணைய ஆரம்பப்பள்ளி ஆசிரியை ஹயேஷிகா பெர்னாண்டோவுக்கு எதிராக, இணையத்தில் அவதூறான மற்றும் தவறான உள்ளடக்கத்தை வெளியிடுவதைத் தடுக்கும் வகையில், மூன்று, இணைய உள்ளடக்க படைப்பாளர்களுக்கு மூன்று நிபந்தனை தடை உத்தரவுகளை, கொழும்பு தலைமை நீதவான் தனுஜா லக்மாலி ஜெயதுங்க பிறப்பித்துள்ளார்.
இணையப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் ஹயேஷிகா பெர்னாண்டோ தாக்கல் செய்த மூன்று தனித்தனி மனுக்களை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
சமிந்த ரணவீர, சுதத் திலகசிறி மற்றும் வண. ராஜாங்கனே சத்தாரதன தேரர் ஆகியோரர், மனுவில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்தனர்.
விசாரணை ஒத்திவைப்பு
இந்த நிலையில், ஜூலை 28ஆம் திகதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



