மிருசுவில் மனிதப்படுகொலை: கோட்டாவின் மன்னிப்பை பெற்றவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Sri Lankan Tamils Tamils Jaffna
By Rakesh Mar 20, 2025 03:42 PM GMT
Report

யாழ்ப்பாணம்(Jaffna), மிருசுவிலில் எட்டுத் தமிழர்களின் கழுத்தை அறுத்துப் படுகொலை செய்த வழக்கில்  மரண தண்டனை விதிக்கப்பட்ட இலங்கை இராணுவத்தின் சுனில் ரத்னாயக்க என்ற ஸ்டாவ் சார்ஜண்டுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச பொது மன்னிப்பு அளித்து விடுதலை செய்தமையை ஆட்சேபித்துத் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீதான விசாரணையை இன்று உயர்நீதிமன்றம் பூர்த்தி செய்துள்ளது.

தீர்ப்பு அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அதுவரையில் ஸ்டாவ் சார்ஜண்ட் சுனில் ரத்னாயக்க நாட்டை விட்டு வெளியேறத் தடை விதித்த உயர் நீதிமன்றம், அவரது கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவும் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவி விலகல் தொடர்பில் அதிரடி அறிவிப்பு

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பதவி விலகல் தொடர்பில் அதிரடி அறிவிப்பு

 வழக்கு விசாரணை

நீதியரசர்கள் யஸந்த கோத்தாகொட, மகிந்த சமயவர்த்தன, அர்ஜுன ஒபயசேகர ஆகியோரைக் கொண்ட ஆயமே இன்று இந்த வழக்கு விசாரணையைப் பூர்த்தி செய்து தீர்ப்பு அறிவிப்பதை ஒத்திவைத்தது.

மிருசுவில் மனிதப்படுகொலை: கோட்டாவின் மன்னிப்பை பெற்றவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Court Rules On Mirisuvil Murder Case

அப்பாவி பொதுமக்கள் எண்மர் இராணுவ நடவடிக்கைகளுக்கு மத்தியில் கோரமாகக் கொல்லப்பட்ட வழக்கு 'ட்ரயல் அட் பார' முறைமையில் மூன்று நீதிபதிகளைக் கொண்ட மேல்நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்ட போது சுனில் ரத்னாயக்கவுக்கு மரண தண்டனை விதிக்கும் தீர்ப்பு ஏகமனதாக வழங்கப்பட்டது.

ஏனைய 4 இராணுவத்தினரும் போதிய ஆதாரமில்லாமல் விடுவிக்கப்பட்டனர்.

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள்! பிரதமர் அளித்துள்ள உறுதிமொழி

மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள்! பிரதமர் அளித்துள்ள உறுதிமொழி

 பொது மன்னிப்பு

இந்தத் தீர்ப்புக்கு எதிராகச் செய்யப்பட்ட மேல்முறையீட்டை விசாரணை செய்த ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற ஆயம், 'ட்ரயல் அட் பார' நீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஏற்று அங்கீகரித்திருந்தது.

2015 ஜூன் 25ஆம் திகதி 'ட்ரயல் அட் பார' மன்றின் மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

மிருசுவில் மனிதப்படுகொலை: கோட்டாவின் மன்னிப்பை பெற்றவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Court Rules On Mirisuvil Murder Case

ஆனால்,2021 மார்ச் மாதத்தில் சுனில் ரத்னாயக்கவுக்கு பொது மன்னிப்பு அளித்து அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ விடுதலை செய்தார். 

அந்தத் தீர்ப்புக்கு எதிராக அடுத்த மாதம் தாக்கல் செய்யப்பட்ட ஐந்து அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் மீது இப்போது தீர்ப்பு வழங்குவது ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.

பிரபாகரன் பற்றிய தகவல்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்திய பாண்டி பஜார் துப்பாக்கிச்சூடு!

பிரபாகரன் பற்றிய தகவல்களை வெளியுலகிற்கு தெரியப்படுத்திய பாண்டி பஜார் துப்பாக்கிச்சூடு!

அடிப்படை உரிமை மீறல் வழக்குகள்

இந்த ஐந்து மனுக்களில் ஒன்று கொல்லப்பட்டவர்களின் ஒருவரின் மகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்தரணி கேசவன் சயந்தனின் அனுசரணையுடன் அந்த மனு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் முன்னிலையாகி வாதிட்டு இருந்தார்.

மிருசுவில் மனிதப்படுகொலை: கோட்டாவின் மன்னிப்பை பெற்றவருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Court Rules On Mirisuvil Murder Case

அதேபோல் மனித உரிமைவாதி அம்பிகா சற்குணநாதன் மற்றும் மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் ஆகியவற்றின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் சார்பிலும் சுமந்திரன் முன்னிலையாகி வாதிட்டு இருந்தார்.

இவற்றைத் தவிர மேலும் இரண்டு அடிப்படை உரிமை மீறல் வழக்குகள் இந்த விடயங்களை ஒட்டி தாக்கல் செய்யப்பட்டிருந்தன.

உயிரிழந்த ஒருவரின் உறவினர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு மனுவுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி ஜிப்ரி அழகரட்ணம் முன்னிலையாகி வாதிட்டிருந்தார்.

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான், பிரான்ஸ், France, Wuppertal, Germany

24 Apr, 2019
மரண அறிவித்தல்

பலாலி கிழக்கு, உரும்பிராய்

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி, Toronto, Canada

20 Apr, 2026
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சங்கானை, யாழ்ப்பாணம், சூரிச், Switzerland

25 Mar, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, கொழும்பு, கந்தரோடை

24 Apr, 2014
மரண அறிவித்தல்

உரும்பிராய், மட்டக்களப்பு, திருகோணமலை, மெல்போன், Australia

22 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US