பொலிஸ் உப பரிசோதகர் ஒருவரின் உரிமைகள் மீறப்பட்டமை தொடர்பில் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு
பொலிஸ் உப பரிசோதகர் சுகத் மெண்டிஸின் அடிப்படை உரிமைகளை பொலிஸ் மா அதிபர் மற்றும் ஏனைய பிரதிவாதிகள் மீறியதாகவும் அவருக்கு 3 மாதங்களுக்குள் 1 மில்லியன் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அத்துடன் அவர் மீது மேற்கொள்ளப்பட்ட தவறான தடையை கருத்திற்கொண்டு அவருடைய சம்பளம், உரிமைகள், பதவி உயர்வுகள் போன்றவற்றில் எந்த வகையிலும் பாரபட்சம் காட்டக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மனுதாரரான ரன்னுலு சுகத் மோகன மெண்டிஸ், 2020 ஆகஸ்ட் 03 ஆம் திகதி கைது செய்யப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டார்.

கூச்சலிட்டு குழப்பம் விளைவிக்கும் அம்பிட்டிய சுமன தேரர்! மட்டக்களப்பில் பொலிஸார் தேரர்களுக்கிடையே பதற்றம் (Video)
போலியான ஆதாரங்கள்
வர்த்தகர் மொஹமட் ஷியாம் கொலை வழக்கில், முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் சஜின் டி வாஸ் குணவர்தனவைக் கைது செய்வதற்காக, மனுதார் போலியான ஆதாரங்களைத் தயாரித்ததாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
அத்துடன் சஜின் டி சில்வாவை கைது செய்வதற்காக, ஆயுதங்களை சிலவற்றை வேண்டுமென்றே சில இடங்களில் வைத்ததாகவும் குற்றம் சுமத்தப்பட்டே அவர் கைது செய்யப்பட்டார்.
எனினும் பின்னர் பிணையில் அனுமதிக்கப்பட்ட அவர், தம்மீது பொய் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதாக மனுத்தாக்கல் செய்தார். இதன் தொடர் விசாரணைகளின் பின்னரே உயர்நீதிமன்றம் மனுதாரருக்கு நீதி வழங்கும் வகையில் தீர்ப்பை அறிவித்துள்ளது.

Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam
