டயனா கமகேவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடை நீக்கம்
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத் தடையை கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றம் தற்காலிகமாக தளர்த்தியுள்ளது.
கடந்த நவம்பர் 18 ஆம் திகதி, சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கொழும்பு பிரதான நீதவான் நீடித்தார். இந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் ஐந்து நாட்களுக்கு தடையை தளர்த்தியுள்ளது.
விசாரணை அறிக்கை
விரிவான விசாரணை அறிக்கையை 2023 ஜனவரி 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.
அத்துடன், இது தொடர்பில் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது
கமகேவின் பிறப்புச் சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் கடவுச்சீட்டு உள்ளிட்ட அடையாள ஆவணங்களின் உண்மைத் தன்மையை சவால் செய்யும் முறைப்பாட்டின் பேரில், நவம்பர் 11ஆம் திகதி கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்கவினால் அவரது வெளிநாட்டுப் பயணங்கள் முதலில் தடை செய்யப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 10 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
