நாட்டில் அதிகரித்துள்ள உப்பு பற்றாக்குறை!
உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சந்தையில் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய முடிவு செய்திருந்தாலும், அது தாமதமாகி வருவதாகவும், அதனால் சந்தையில் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும் அமரசிங்க கூறியுள்ளார்.
அடுத்த வாரத்திற்குள் உப்பு இருப்புக்கள் சாராரண நிலைக்கு வரும் எனவும், தற்போதுள்ள பற்றாக்குறை கட்டுப்படுத்தப்படும் என்றும் அமரசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
உப்பின் விலை
இந்நிலையில் ஒரு கிலோகிராம் உப்பு 450 முதல் 500 வரை விற்கப்படுவதற்கான நிலை காணப்படுவதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
இதற்கமைய உப்பின் விலை குறித்து நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு முறைபாடுகள் வந்துள்ளதாகவும், தேவையான நடவடிக்கை எடுக்குமாறு சோதனை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் இயக்குநர் அசேல பண்டார விளக்கமளித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 8 மணி நேரம் முன்

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
