மத்திய கிழக்கின் ஆதரவை நோக்கும் ட்ரம்ப்! இஸ்ரேலுக்கு பெரும் சவால்
வளைகுடா நாடுகளை இலக்குவைத்து அமெரிக்கா வகுக்கும் திட்டங்கள் அனைத்தும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை அதிருப்தி அடைய செய்யும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் மத்திய கிழக்குக்கான விஜயம் தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே இந்த விடயத்தை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சவுதி அரேபியாயுடன் கையெழுத்தான ஒப்பந்தங்கள் அனைத்தும் முன்கூட்டியே இணக்கத்திற்கு வந்த ஒன்றாக அமைந்திருக்ககூடும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்பின் மத்திய கிழக்குக்கான வருகை
சவுதி அரேபியாவை பொருத்தவரையில் சிரியாவைத் தவிர, காசாவையும் கவனிக்க வேண்டிய கட்டாயம் உள்ள நிலையில் அமெரிக்காவின் ஆதரவென்பது பல இணக்கப்பாடுகளை எட்ட வழிவகுக்கும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் ட்ரம்பின் மத்திய கிழக்குக்கான வருகையானது பிராந்தியத்தில் சவுதி அரேபியா தன்னை ஒரு முக்கிய வீரராக நிலைநிறுத்திக் கொள்ள ஒரு தனித்துவமான வாய்ப்பாகும் என்றும் அவர்கள் வழியுறுத்தியுள்ளனர்.
சவுதி அரேபியா ஒரு முன்னணி எண்ணெய் ஏற்றுமதியாளராக உள்ளது. இது உலகளாவிய எண்ணெய் விநியோகம் மற்றும் விலை இரண்டிலும் பெரும் செல்வாக்கைக் கொண்டுள்ளது.
எண்ணெய் விலைகளைக் குறைக்க விரும்பும் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு சவுதி அரேபியாவின் ஆதரவென்பது மிகவும் முக்கியமானது.
பஷார் அல்-அசாத்
மேலும், ஒரு முக்கிய பிராந்திய வீரராக, பிராந்திய பிரச்சினைகளில் அதிக பங்களிப்பை வழங்க விரும்புவதாக சவுதி அரேபியா கூறுகிறது.
குறிப்பாக, கடந்த சில மாதங்களாக ஈரானின் செல்வாக்கு சரிந்து வருகிறது. சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் பதவி நீக்கம் செய்யப்பட்ட பின்னர், சவுதி அரேபியா வலுவான உறவுகளை அந்நாட்டோடு உருவாக்கி வருகிறது.
இதன் பின்னணியில் புதிய அதிகாரிகள் அங்கு ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்டனர். இந்த மாற்றங்கள் பிராந்தியத்தில் முதன்மையான நாடாக மாறுவதற்கான வாய்ப்பை சவுதி அரேபியாவுக்கு ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், மத்தியகிழக்கில் ஒரு பிரச்சினையைத் தீர்க்க விரும்பினால், அதற்கான முகவரி சவுதி என்ற தெளிவான செய்தியை அவர்கள் சர்வதேசத்திற்கு கூற விரும்புகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 8 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri
