போராட்டத்துக்கு எதிராக பொலிஸாரின் கோரிக்கை! பரிசீலிக்காத நீதிமன்றம்!
காலி முகத்திடலில் உள்ள ஜனாதிபதி செயலக நுழைவாயிலில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடைகளை அகற்றுவதற்கு அவசர உத்தரவை பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கையை பரிசீலிப்பதற்கான திகதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் இந்தக் கோரிக்கையை பரிசீலிப்பதை கொழும்பு நீதவான் நீதிமன்றம் மே 12 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது.
இந்த கோரிக்கை இன்று (10) கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்க முன்னிலையில் பரிசீலிக்கப்படவிருந்தது.
எனினும் குறித்த கோரிக்கை மீதான பரிசீலனையை எதிர்வரும் 12ஆம் திகதி வரை ஒத்திவைப்பதாக பிரதம நீதிவான் உத்தரவிட்டார்
கோட்டகோகம எதிர்ப்புப் போராட்டத்தினால் ஜனாதிபதி செயலகத்துக்கான பாதை தடைப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
எனவே தடைகளை நீக்குவதற்கு அவசரமாக உத்தரவு பிறப்பிக்குமாறு பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்த கோரிக்கையை இன்று கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் பரிசீலிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

குக் வித் கோமாளி சீசன் 6 ரசிகர்களுக்கு வந்த ஒரு தகவல்.. திடீரென நடந்துள்ள மாற்றம், என்ன தெரியுமா? Cineulagam
