மகிந்தவின் பாதுகாப்பு தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பைக் குறைப்பதற்கான அரசாங்கத்தின் முடிவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
குறித்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீண்ட நேரம் பரிசீலித்த பிறகு உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் (Mahinda Rajapaksa) பாதுகாப்பு குறைப்பு தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து உயர் நீதிமன்றம் கடந்த 06ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
வழங்கப்பட்ட பாதுகாப்பு
உயர் நீதிமன்ற நீதியரசர்களான பிரீதி பத்மன் சூரசேன, ஜனக் டி சில்வா மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் கொண்ட அமர்வு குறித்த அடிப்படை உரிமை மனுவை மார்ச் 19 ஆம் திகதி(இன்று) விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டிருந்தது.
மகிந்த ராஜபக்சவிற்கு வழங்கப்பட்ட பாதுகாப்புப் படையினரை 60 அதிகாரிகளாக குறைப்பதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்திற்கு எதிராக அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
முன்னதாக மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்திருந்தது.
முன்னாள் ஜனாதிபதிகள் மற்றும் அமைச்சர்களிக் பாதுகாப்பு தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் பிரகாரம் முன்னாள் ஜனாதிபதிகளுக்கான இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டு பொலிஸ் பாதுகாப்பு மாத்திரமே தற்போது வழங்கப்படுகிறது.
அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்தால் மகிந்த ராஜபக்ச உட்பட முன்னாள் ஜனாதிபதிகளின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகளின் சில உறுப்பினர்கள் குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தனர்.
மகிந்த ராஜபக்ச
குறிப்பாக மகிந்த ராஜபக்சவுக்கு ஐ.எஸ் அமைப்பு உள்ளிட்ட பல அமைப்புக்களில் இருந்து உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சுமத்தியிருந்தது.
இந்த நிலையில் மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு குறைக்கப்பட்டமைக்கு எதிராக சட்ட ரீதியான நடவடிக்கையை எடுக்கவும் பொதுஜன பெரமுன தீர்மானித்தது.
இதனடிப்படையில் 24.01.2025 அன்று அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
இதில் தனது பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குறைக்கப்பட்டதை சுட்டிக்காட்டியுள்ளதுடன் மீண்டும் தனது பாதுகாப்பை அதிகரிக்கவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

950 ராணுவ வீரர்களின் உடல்களை மாற்றிக்கொண்ட ரஷ்யா, உக்ரைன்: ஒரே மாதத்தில் இரண்டாவது முறை News Lankasri
