பசில் ராஜபக்சவுக்கு சர்வதேச சிவப்பு பிடியாணை உத்தரவு
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.
2014ஆம் ஆண்டு ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், நிதி பயன்பாடு தொடர்பான வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்பு
பசில் ராஜபக்சவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு, கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) குற்றப் புலனாய்வுத் துறையின் சட்டவிரோதச் சொத்துக்கள் பிரிவிற்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இன்டர்போல் மூலம் சிவப்பு அறிவிப்புகளைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறையால் வழங்கப்பட்ட உண்மைகளை முன்வைத்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Bigg Boss 10: மக்களின் சுவாரசியத்திற்காக முனியம்மாவின் விபரீத செயல்... அச்சச்சோ இப்படி மாட்டிக்கிட்டாரே? Manithan