துப்பாக்கி முனையில் மிரட்டப்பட்ட தமிழ் கைதிகள் விவகாரம்: உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, அனுராதபுரம் சிறைச்சாலைக்குள் சென்று அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகளை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கை தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக அனுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் கைதிகள் சிலர் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவை இன்று விசாரணைக்கு எடுத்த போதே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
எஸ்.துரைராஜா, அச்சல வெங்கப்புலி, அர்ஜூன ஒபேசேகர ஆகிய மூன்று நீதியரசர்கள் அடங்கிய அமர்வின் முன் மனு விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரணைக்கு எடுப்பது சம்பந்தமாக ஏற்கனவே நீதிமன்றம் அறிவிப்பணை வெளியிட்டுள்ளதுடன் வழக்கிற்கு ஏதுவான சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு உயர் நீதிமன்றம், பொலிஸ் மா அதிபருக்கு இதற்கு முன்னர் உத்தரவிட்டிருந்தது.
மனு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது மனுதார் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், அந்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பாக பொலிஸ் மா அதிபரிடம் கோருமாறு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இதனை கவனத்தில் எடுத்துக்கொண்ட நீதியரசர்கள் அமர்வு, அந்த விசாரணைகளின் தற்போதைய முன்னேற்றம் பற்றிய அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் எதிர்வரும் ஆகஸ்ட் 9 ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்படவுள்ளது.
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
அழும் குழந்தைகளை வாஷிங் மெஷினுக்குள் அடைக்கும் காப்பக ஊழியர்கள்: அதிரவைத்துள்ள ஒரு செய்தி News Lankasri
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan