மகளிடம் மோசமாக நடந்துகொண்ட தந்தை: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Kilinochchi Sri Lanka Magistrate Court Child Abuse
By Sudaron Jul 12, 2023 09:35 PM GMT
Report

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் பத்து வயதுடைய தனது சொந்த மகளை அடித்து துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்த 79 வயதுடைய தந்தைக்கு பதினேழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுதுடன் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் 12 மாத கால சாதாரண சிறைத் தண்டனையும் விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நேற்றையதினம் (12.07.2023) இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதியில் பத்து வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த 2013 ஆம் ஆண்டு அடித்து துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளமை தொடர்பில் அவரது தந்தையான 78 வயதுடைய முதியவர் விசாரணைகள் மூலம் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டு நேற்றையதினம் (12-07-2023) தினம் கிளிநொச்சி நீதி மேல் நீதிமன்றத்தில் மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது

குறித்த வழக்கானது நேற்று கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.ஏ சகாப்தீன் அவர்கள் முன்னிலையில் தீர்ப்புகாக எடுத்துக் கொள்ளப்பட்டது.

மகளிடம் மோசமாக நடந்துகொண்ட தந்தை: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு | Court Order To Father Abuse His Own Daughter

நீதிமன்றத்தின் தீர்ப்பு

கிளிநொச்சி நகரை அன்மித்த பகுதியில் கடந்த 2013 ஆம் ஆண்டு தனது 10 வயதுடைய மகளை அடித்து துன்புறுத்தியும் பூவரசம் தடியினால் தாங்கியும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார் என்றும் சிறுமியின் வாக்கு மூலத்தின் மூலமும் சாட்சியங்கள் மூலமும் சட்ட வைத்திய அதிகாரியின் மருத்துவ அறிக்கை என்பவற்றின் மூலம் மன்று குறித்த முதியவரை குற்றவாளியாக அடையாளம் கண்டு நேற்றையதினம் மேற்படி தீர்ப்பை வழங்கியுள்ளது. 

இதன்போது எதிரி சார்பாக முன்னிலையான சட்டத்தரணி குறித்த குற்றவாளியானவர் பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மாதாந்த சிகிச்சைகளை பெற்று வருவதாகவும் மன்றுக்கு விண்ணப்பம் செய்திருந்தமையினை கவனத்தில் எடுத்த மன்று குறித்த குற்றவாளிக்கு சிறைச்சாலையில் வைத்திய வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறும் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

இவ்வாறு தனது சொந்த மகளை அடித்து துன்புறுத்தி பாலியல் துஸ்பிரயோகம் செய்த 79 வயதுடைய தந்தைக்கு பதினேழு ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுதுடன் பத்தாயிரம் ரூபா தண்டப்பணம் செலுத்துமாறும் தவறும் பட்சத்தில் 12 மாத கால சாதாரணசிறைத்தண்டனையும் விதித்து கிளிநொச்சி மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US