சாய்ந்தமருது நகர சபை சட்டரீதியானது! இரண்டு மாதங்களுக்குள் தேர்தல் நடத்த உயர்நீதிமன்றம் உத்தரவு
சாய்ந்தமருது நகர சபைக்கான பிரகடனம் சட்டரீதியானது என்றும், எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் எல்லை நிர்ணயம் செய்யப்பட்டு அதற்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என உயர்நீதிமன்றம் இன்று(07.05.2026) உத்தரவிட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலின் போது கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் சட்டச்சிக்கல்கள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
இதனை எதிர்த்து முன்வைக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், தற்போதைக்கு கல்முனை மாநகர சபை எல்லைக்குள் அமைந்துள்ள சாய்ந்தமருது நகர சபைக்கான பிரகடனம் சட்டரீதியானது என்று தீர்ப்பளித்துள்ளது.

அதன் காரணமாக எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கல்முனை மாநகர சபை மற்றும் சாய்ந்தமருது நகர சபை என்பவற்றுக்கான எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டு அது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி வெளியிட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், எல்லை நிர்ணயம் செய்யப்பட்டவுடன் சாய்ந்தமருது நகர சபை மற்றும் கல்முனை மாநகர சபைக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்றும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக தகவல் - சிஹான் பாரூக்
