30 மில்லியன் ரூபாய்க்கு சொகுசு பங்களா - ஷிரான் பாசிக்கின் தந்தைக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
ரூ. 30 மில்லியன் போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டு, சொகுசு வீடு வாங்கிய ஷிரான் பாசிக்கின் தந்தையை விளக்கமறியலில் வைக்குமாறு மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் (CCIB) உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பா வழக்கு இன்று(12.09.2026) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே மேற்கண்டவாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
விளக்கமறியல் உத்தரவு
ஷிரான் பாசிக்போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைத்த , ரூ. 30 மில்லியன் பணத்தைக் கொண்டு, கம்பஹாவில் உள்ள பிரைம் ரெசிடென்சியில் தனது தந்தை அப்துல் ரசாக் ஹென்றி பாசிக் பெயரில் ஒரு சொகுசு வீட்டை வாங்கியுள்ளார்.

இது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்ற நிலையில், பணச்சலவைச் சட்டத்தின் கீழ் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் (CCIB) அப்துல் ரசாக் ஹென்றி பாசிக் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, இன்று(12) நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய வேளையில், விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.