இராமநாதன் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
யாழ். போதனா வைத்தியசாலையில் அதிகாரிகளின் பணிக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டு தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையான நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி என். கௌசல்யா ஆகியோரை தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல யாழ்.நீதவான் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலைக்கு சென்று வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தியுடன் தர்க்கத்தில் ஈடுபட்டமை தொடர்பாக, பொலிஸில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றில் முன்னிலை
இது தொடர்பாக இன்று யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணியுடன் நாடாளுமன்ற உறுப்பினர் முன்னிலையாகியிருந்தார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, வைத்தியசாலைக்குள் பணிப்பாளரின் அனுமதி இன்றி அத்துமீறி நுழைதல், முறைப்பாட்டாளருக்கு இடையூறு விளைவித்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபட கூடாது என சந்தேகநபர்களுக்கு அறிவுறுத்திய நீதவான், சந்தேக நபர்களை தலா ஒரு இலட்ச ரூபாய் பெறுமதியான ஆள் பிணையில் செல்ல அனுமதித்தார்.
குறித்த வழக்கினை மேற்கொண்டு நடாத்துவது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனைகளை பெறுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்திய நீதவான், வழக்கினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.
மேலதிக தகவல் - தீபன்
தொடர்புடைய செய்திகள்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உண்மையை மட்டும் தான் பேசுவார்களாம்...யார் யார்ன்னு தெரியுமா? Manithan

நிறைய பேரிடம் கடன் வாங்கி இருக்கிறார், அண்ணனுக்கு உதவ முடியாது.. திட்டவட்டமாக தெரிவித்த நடிகர் பிரபு Cineulagam

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
