தேசிய மக்கள் சக்தியின் ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் கட்டுப்பாடு
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட தரப்பினருக்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை வீதி, கொட்டா வீதி, நாவல வீதி ஊடாக சரண வீதி மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அலுவலகத்திற்கு பிரவேசிக்கும் வீதிகளில் இன்று (08.06.2023) நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை தடுத்து இந்த உத்தரவு பெறப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
தடை உத்தரவு
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, டில்வின் சில்வா, லால்காந்த, விஜித ஹேரத், வசந்த சமரசிங்க, சுனில் ஹந்துன்னெத்தி உள்ளிட்ட 26 பேருக்கு எதிராக இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
க. பொ.த.சாதாரண பரீட்சார்த்திகள் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ள வேண்டாம் என்றும் பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் தொடர்ந்தும் அறிவுறுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Viral Video: வீட்டிற்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பு... காப்பாற்றி தண்ணீர் கொடுக்கும் இளைஞர் Manithan

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
