இளஞ்செழியனின் வீடு தேடிச் சென்ற முல்லைத்தீவு பொலிசார்
திருத்தப்பட்ட நீதிமன்றின் கட்டளையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தளுக்கு தடையில்லை என பீற்றர் இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த பீற்றர் இளஞ்செழியன்,
13.5.2021 நீதிமன்றினால் எனக்கும் இன்னும் பலருக்கும் பிறப்பிக்கப்பட்ட தடைக்கட்டளைக்கு 17.5.2021 அன்று நகர்த்தல் பத்திரம் ஊடாக சட்டத்தரணிகள் நீதிபதியின் கவனத்துக்குக் கொண்டுவந்ததை அடுத்து திருத்தப்பட்ட கட்டளை ஒன்று அன்று பிறப்பிக்கப்பட்டது.
அந்த திருத்தப்பட்ட கட்டளையை இன்று 18.05.2021 முல்லைத்தீவு தலைமை பொலிஸ் அதிகாரி எனது இல்லத்துக்கு வருகை தந்து தந்திருந்தார். AR/418/21 இலக்கமுடைய 17.5.2021 திகதியிடப்பட்ட கட்டளையில் 46 பெயர்கள் குறிக்கப்பட்டு பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலோ தனிமைப்படுத்தல் மற்றும் நோய்த்தடுப்புச் சட்டத்திற்கு முரனாகவோ நடாத்தக்கூடாது என மட்டும் கட்டளையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கட்டளை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்குத் தடையில்லை என்பதைத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதேவேளை வருகை தந்த முல்லைத்தீவு தலைமை பொலிஸ் அதிகாரி எங்கேனும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடாத்தப்போகின்றீர்களா என வினாவினார்.
ஆம் காலை 10 மணிக்கு நந்தி கடல் கரையோரத்தில் நானும் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் மற்றும் சிலரும் இணைந்து நினைவஞ்சலி செலுத்தியுள்ளோம் என பதிலழித்துள்ளேன்.
தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் முல்லைத்தீவு, முள்ளியவளை, புதுக்குடியிருப்பு, பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகள் தனிமைப்படுத்தப்படு நினைவேந்தல் நிகழ்வைத் தடை செத்தாலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நிபந்தனைகளுடன் நடாத்துவதுக்கு அயராது உழைத்த சிரெஸ்ட சடடத்தரனி அன்ரன் புனிதநாயகம், சட்டத்தரணிகளான தனஞ்செயன், சுதர்சன், ருஜிகா,காண்டீபன் சுகாஸ் மற்றும் ஏனைய முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.




