இந்திய கடற்றொழிலாளர்களுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு(Photos)
இலங்கை கடற்பரப்பில் சட்டவிரோதமாக நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்த 6 இராமேஸ்வர கடற்றொழிலாளர்களை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதிமன்றினால் உத்தரவிடப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மன்னார் நீதவான் நேற்று(21) உத்தரவிட்டுள்ளார்.
இந்திய கடற்றொழிலாளர்கள்
கடந்த 20 ஆம் திகதி எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்தியா - இராமேஸ்வரத்தை சேர்ந்த 6 கடற்றொழிலாளர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
அத்துடன் அவர்கள் மீன்பிடிக்க பயன்படுத்திய படகொன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இதன்போது, கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டுள்ளப்பட்டதுடன், விசாரணைகளை தொடர்ந்து கடற்றொழிலாளர்கள் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.
நீதவான் உத்தரவு
கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளின் விசாரணையின் பின்னர் நேற்று மன்னார் நீதிமன்றத்தில் கடற்றொழிலாளர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது மன்னார் நீதவான் கைது செய்யப்பட்டுள்ள 6 இந்திய கடற்றொழிலாளர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் 4 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்:
எல்லை தாண்டி மீன் பிடித்த 6 ராமேஸ்வர கடற்றொழிலாளர்கள் கைது (Photos) |





ட்ரம்பால் 25 பில்லியன் டொலர் வருவாயை இழக்கும் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள ஆசிய நாடொன்று News Lankasri
