எல்லை தாண்டி மீன் பிடித்த 6 ராமேஸ்வர கடற்றொழிலாளர்கள் கைது (Photos)
எல்லை தாண்டி மீன் பிடிக்க ராமேஸ்வரத்திலிருந்து வந்த 6 கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், படகொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களை கடற்படையினர் தலைமன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமேஸ்வரத்திலிருந்து வந்த கடற்றொழிலாளர்கள்
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து நேற்று காலை 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் கடற்றொழிலாளர்கள் மீன் பிடி அனுமதி சீட்டு பெற்று மீன் பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.
இதனை தொடர்ந்து, இலங்கை தலைமன்னாருக்கும் - நாச்சிகுடாவுக்கும் இடையே கடற்றொழிலாளர்கள் நேற்று நள்ளிரவு மீன்பிடித்துள்ளனர்.
இதன்போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக 11 மீனவர்களை கைது செய்துள்ளதுடன், இரண்டு படகுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
கடற்படையினரின் சோதனை
இதில் ஒரு படகு இயந்திர கோளாறு காரணமாக காற்றின் வேகத்தால் எல்லை தாண்டி வந்ததாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்ததையடுத்து கடற்படையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
இதனையடுத்து, இலங்கை கடற்படையினர் இயந்திர கோளாறை உறுதி செய்து, அந்த படகையும் அதிலிருந்து 5 கடற்றொழிலாளர்களையும் தமிழகத்திற்கு திருப்பி அனுப்பியுள்ளனர்.
இந்த நிலையில், தங்கச்சி மடத்தை சேர்ந்த தூதர் என்பவருக்கு சொந்தமான மற்றொரு படகையும் அதிலிருந்த 6 கடற்றொழிலாளர்களையும் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்துள்ளதுடன், அவர்களின் படகையும் கைப்பற்றியுள்ளனர்.
ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க கடற்றொழிலாளர்களின் கோரிக்கை
இலங்கை கடற்படையினர் நடத்திய முதல் கட்ட விசாரணைக்கு பின்னர் 6 கடற்றொழிலாளர்களும் மன்னார் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சிறை பிடிக்கப்பட்ட ராமேஸ்வரம் கடற்றொழிலாளர்கள் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுததப்பட உள்ளனர்.
இதனையடுத்து, சிறை பிடிக்கப்பட்டவர்களையும், படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ராமேஸ்வரம் அனைத்து விசைப்படகு மீனவ சங்க மீனவர்கள் மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள் ஊடாக இலங்கை அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இறுதி நேரத்தில் முடிவை மாற்றிய டலஸ் ஆதரவாளர்கள்: சன்ன ஜயசுமன தெரிவிப்பு |





எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவனாந்தமை கொலை செய்ய காத்திருக்கும் அடியாட்கள்.. ஆதி குணசேகரன் போடும் திட்டம் Cineulagam
