மன்னார் - கோவில் மோட்டை அரச காணி வழக்கில் வழங்கப்பட்டுள்ள உத்தரவு
மன்னார் - மடு கோவில் மோட்டை அரச காணி வழக்கு நீதிமன்றத்தில் வைத்து இணக்கமாக முடிக்கப்பட்டுள்ளது.
மன்னார் - மடு கோவில் மோட்டை அரச வயல்காணிகளில் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக பெரியபண்டிவிரிச்சான் - மேற்கு விவசாயிகள் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வந்துகொண்டிருக்கிற நிலையில் குறித்த காணி தமக்குரியது என்றும் குறித்த காணியை தங்களுக்கு வழங்குமாறும் மடு திருத்தல நிர்வாகத்தினர் கூறி வருகின்றனர்.
தாம் பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வருகின்ற கோவில் மோட்டை அரச வயல் காணியை எங்களுகே வழங்குமாறு கடந்த ஒரு வருடமாக உண்ணாவிரதம் போன்ற பல போராட்டங்களை கோவில் மோட்டை விவசாயிகள் முன்னெடுத்திருந்த நிலையில் குறித்த கோவில் மோட்டை அரச காணியை விவசாயிகளுக்கு வழங்குமாறு வடக்கு மாகாணம் முடிவெடுத்து, குறித்த காணியை கோவில் மோட்டை விவசாயிகளுக்கு பிரித்தளிக்குமாறு மடு பிரதேச செயலாளரால் கடிதங்கள் அனுப்பப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த கோவில் மோட்டை விவகாரம் தொடர்பில் மடு பங்குத் தந்தை உட்பட மன்னார் ஆயர் இல்லம் பொலிஸாரின் உதவியுடன் மன்னார் நீதிவான் நீதிமன்றத்தை நாடியிருந்த நிலையில் குறித்த வழக்கு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
வழக்கு விசாரணையின் போது பங்குத் தந்தைகள் தரப்பில் ஜனாதிபதி சட்டத்தரணி ரியண்டி அரச குணரத்தன தலைமையில் 18 சட்டத்தரணிகள் முன்னிலையானார்கள், கோவில் மோட்டை கிறிஸ்தவ விவசாயிகள் தரப்பில் சட்டத்தரணி ஹுனைஸ் தலைமையில் மூவர் முன்னிலையாகியிருந்தனர்.
அரச தரப்பிலும் சட்டத்தரணி ஒருவர் முன்னிலையாகியுள்ளார். பங்குத் தந்தைகள் தரப்பில் தற்போது 54 ஏக்கர் கோவில் மோட்டை அரச வயல் காணிகளில் பெரும்போக பயிர்ச் செய்கை மேற்கொண்டுவரும் கோவில் மோட்டை விவசாயிகள் தங்களுக்கு குத்தகை தர வேண்டுமெனவும், மிகுதியுள்ள காணிகளை பங்குத் தந்தைகளுக்கு கொடுக்க வேண்டுமெனவும், கோவில் மோட்டையில் விவசாயம் செய்யும் விவசாயிகளையும் கைது செய்யுமாறும் பங்குத் தந்தைகள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் குழாம் வாதத்தினை முன்வைத்தனர்.
அப்போது பதிலளித்த நீதிபதி கோவில் மோட்டை காணி உங்களுடையது என்பதற்கான ஆவணத்தை தாருங்கள் அதை வைத்து நீதியை வழங்குகிறேன் என தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்த பங்குத்தந்தைகள் தரப்பு சட்டத்தரணிகள் கோவில் மோட்டை காணிக்கான ஆவணங்கள் எங்களிடம் இல்லையென தெரிவித்துள்ளனர்.
அதற்கு பதிலளித்த நீதிபதி, சட்டமென்பது விவசாயிகள், பங்குத் தந்தைகள், பொலிஸார் எல்லோருக்கும் சமனானது, குறித்த கோவில் மோட்டை காணி அரச காணியாக இருக்கின்றபோது, உங்களிடம் ஆவணங்கள் ஏதுமில்லாத நிலையில், எப்படி நீங்கள் வாதிடுவது போல் தீர்ப்பு வழங்க முடியும்? அரச காணியில் விவசாயிகள் விவசாயம் செய்யத்தான் முனைவார்கள் என தெரிவித்திருந்தார்.
இதற்கு பதிலளித்த கோவில் மோட்டை விவசாயிகள் தரப்பிலான சட்டத்தரணிகள் குழு, இந்த கோவில் மோட்டை அரச வயல் காணியில் கோவில் மோட்டை விவசாயிகள் 40 வருடங்களுக்கு மேலாக தகப்பன் அல்லது தகப்பன் இறந்த பின்பு மகனென பரம்பரை பரம்பரையாக விவசாயம் மேற்கொண்டு வருகின்றனர், அரச காணிக்கு ஏன் அவர்களுக்கு குத்தகை கொடுக்க வேண்டுமென கேள்வி எழுப்பியிருந்தனர்.
அப்படி கொடுக்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. அதற்கு பங்குத் தந்தைகள் தரப்பில் இலங்கை காணி ஆனையாளர் நாயகத்தால் கோவில் மோட்டை காணியில் 5 ஏக்கர் மடுத்திருத்தலத்திற்கு விவசாய நடவடிக்கைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளமைக்கான ஆவணத்தை முன்வைத்து, குறித்த காணியில் 5 ஏக்கரிலாவது பங்குத்தந்தைகளுக்கு விவசாயம் மேற்கொள்ள அனுமதிக்க வேண்டுமென கோரப்பட்டது.
இதற்கு கோவில் மோட்டை விவசாயிகள் தரப்பிலான சட்டத்தரணிகள் அந்த 5 ஏக்கரிலும் கோவில் மோட்டை விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டுள்ளனர், வேறேதும் காணிகளிருந்தால் செய்யுங்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது, மேலும் இந்த போகத்திற்கு மட்டும்தான் இந்த நடைமுறையெனவும், அரச அதிகாரிகள் இதை காணி வழங்கும் முறையின் அடிப்படையில் மேலதிக செயற்பாடுகளை முன்னெடுக்குமாறும் நீதிபதி தெரிவித்திருந்ததோடு குறித்த விவகாரம் இணக்கமாக முடிக்கப்பட்டிருந்தது.
இது தொடர்பில் குறித்த வழக்கில் முன்னிலையான அரச சட்டத்தரணி இந்த காணி முழுக்க அரசாங்கத்திற்கு சொந்தமானது, இம்முறை பெரும்போகம் செய்யப்பட்டிருப்பதால் இந்த இணக்கப்பாட்டிற்கு அடிப்படையில் இப்படியே செய்யட்டும், ஆனால் வரும் முறை அரசாங்கம்தான் தீர்மானிக்கும் இந்த காணியை யாருக்கு, எப்படி வழங்குவதென அவர் தெரிவித்திருந்தார்.

பதினாறாவது மே பதினெட்டு 4 நாட்கள் முன்

சீனா, துருக்கியை அடுத்து பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் வழங்கும் ஐரோப்பிய நாடு - இந்தியாவின் திட்டம் என்ன? News Lankasri

இந்தியா முழுவதும் வெறும் 25 ரூபாயில் ரயில் பயணம் செய்யலாம்.., வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே இயக்கப்படும் News Lankasri

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
