மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்களுக்கான வெற்றிடங்கள் : நால்வரை முன்மொழிந்த ஜனாதிபதி
மேன்முறையீட்டு நீதிமன்றில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு நான்கு பேரின் பெயர்களை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியலமைப்பு பேரவைக்கு முன்மொழிந்துள்ளார்.
அவர்களில் மூன்று மூத்த மேல் நீதிமன்ற நீதிபதிகளான - கிஹான் குலதுங்க, தமித தோட்டவத்த மற்றும் அமல் ரணராஜா ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். அவர்களை பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய பரிந்துரைத்துள்ளார்.
ஐந்து வெற்றிடங்கள்
நான்காவது வேட்பாளர் சிரேஷ்ட மன்றாடியார் நாயகம் மஹேன் கோபல்லவின் பெயரை சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க பரிந்துரை செய்துள்ளார்.
தற்போது, மேன்முறையீட்டு நீதிமன்றல் ஐந்து வெற்றிடங்கள் உள்ளன. மற்றொரு நீதியரசரான விக்கும் களுஆராச்சியும் அடுத்த மாதம் ஓய்வு பெற உள்ளார்.
இதற்கிடையில், உயர் நீதிமன்ற நீதியரசர் விஜித் மலல்கொட கடந்த திங்கட்கிழமை ஓய்வுபெற்றதையடுத்து, உயர் நீதிமன்ற நீதியரசர்களின் வெற்றிட எண்ணிக்கையை மூன்றாக உயர்ந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |