வவுனியாவில் போராட்டங்களை முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு..!
வவுனியா நகரில் இன்றைய தினம் ஆர்பாட்டங்கள் மேற்கொள்வதற்கு காணாமல் ஆக்கப்பட்ட சங்கங்களை சேர்ந்த நால்வருக்கு வவுனியா நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தேர்தல் பிரசாரக்கூட்டம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக இன்று (01) வவுனியா வருகை தரவுள்ளார்.
இதனையடுத்து பொலிஸாரால் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பத்தின் பிரகாரம் குறித்த நான்கு பேருக்கும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தடைஉத்தரவு பத்திரங்கள்
அந்தவகையில் வவுனியா வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவி சிவாநந்தன் ஜெனிற்றா ,தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் இணைப்பாளர் கோபாலகிருஸ்ணன் ராஜ்குமார், அந்த சங்கத்தின் தலைவிகாசிப்பிள்ளை ஜெயவனிதா மற்றும் காணாமல்போன அமைப்பைச் சேர்ந்த சண்முகநான் சறோஜாதேவி ஆகியோருக்கே இவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த நால்வரும் வவுனியா நகரில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இன்று ( 01.09.2024) காலை 6.00 மணி தொடக்கம் பிற்பகல் 6.00 மணி வரையான காலப்பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் என்பனவற்றை மேற்கொள்வதற்கு குற்றவியல் கோவையின் பிரிவு 106(01) இன் கீழ் தடை விதிக்கப்படுவதாக நீதிமன்ற உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தடைஉத்தரவு பத்திரங்கள் அந்தந்த பிரிவுகளைச் சேர்ந்த பொலிஸாரால் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தங்கம் அதிகம் வைத்திருக்கும் 7 முக்கிய நாடுகள்: தங்கத்தை குவிப்பதற்கான ரகசியம் இதுதான் News Lankasri
