தென்னிலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்பம் - பலரை ஏமாற்றிய ஜனாதிபதி வேட்பாளர்கள்
இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவுள்ள நிலையில், வெற்றியாளர் தொடர்பில் பல்வேறு குழப்ப நிலைகள் ஏற்பட்டுள்ளன.
அரசியல்மட்டத்தில் பல்வேறு கட்சிகளின் பேரம் பேசுதல் தீவிரம் அடைந்து வரும் நிலையில், பல நட்சத்திர ஹோட்டல்களில் மந்திராலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இவ்வாறான பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களினால் வழங்கப்பட்ட சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததன் காரணமாக பல கட்சி தவால்கள் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பல்வேறு சலுகைகள்
பல்வேறு சலுகைகள் மற்றும் வாக்குறுதிகளின் அடிப்படையில் கட்சி மாறிய உறுப்பினர்கள் பலர் மௌனமாக இருப்பதாகவும், தாங்கள் ஏற்கனவே இருந்த குழுவில் சேர முயற்சிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கட்சி மாற இணக்கம் தெரிவித்த சில உறுப்பினர்கள் தங்கள் தொலைபேசி எண்களையும் மாற்றிக் கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும் கட்சி மாறிய பெரும்பான்மையான உறுப்பினர்கள் மீண்டும் அரசியலுக்கு வருவதில்லை என தீர்மானித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 19 மணி நேரம் முன்

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri
