விமல் வீரவன்சவுக்கு மீண்டும் நீதிமன்ற அழைப்பாணை பிறப்பிப்பு
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச எதிர்வரும் நவம்பர் மாதம் 30ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (16) மீண்டும் அழைப்பாணை பிறப்பித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்புச் செயல் தொடர்பில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாடு ஒன்றிற்கு அமைவாகவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற உத்தரவு
விமல் வீரவன்ச வெளியிட்ட சர்ச்சைக்குரிய கருத்தொன்று நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த முறைப்பாடு முன்வைக்கப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டைக் கருத்திற்கொண்ட மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் முன்னதாக விமல் வீரவன்சவுக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டிருந்த போதிலும், குறித்த தினத்தில் அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து, எதிர்வரும் நவம்பர் 30 ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகி தமது விளக்கங்களை முன்வைக்குமாறு உத்தரவிட்டு, அவருக்கு மீண்டும் அழைப்பாணை அனுப்புமாறு நீதிமன்றம் பணித்துள்ளது.
சர்ச்சையை ஏற்படுத்திய அநுராதபுர மோதல் - கஸ்ஸப தேரர் உள்ளிட்ட குழுவினரின் பரிசோதனை முடிவுகள் வெளியாகின