பலாங்கொடை கஸ்ஸப தேரர் தொடர்பான வழக்கு! நாளை மீண்டும் விசாரணை
பலாங்கொடை கஸ்ஸப தேரர் கைகளில் விலங்கிடப்பட்ட நிலையில், சிறைச்சாலை பேருந்தில் இன்றைய தினம் (16.11.2026) நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த தேரரை திருகோணமலை கடற்கரைப் பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத நிர்மாணங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை தொடர்பான வழக்கில் இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட பலாங்கொடை கஸ்ஸப தேரர்
அதற்கமையவே பலாங்கொடை கஸ்ஸப தேரர் இன்று நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

அனுராதபுரம் ருவன்வெலிசாயவுக்கு அருகிலுள்ள தானசாலை வளாகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பிலேயே பலாங்கொடை கஸ்ஸப தேரர் கைது செய்யப்பட்டார்.
இதனையடுத்து, நேற்று (15) மாலை அவர் திருகோணமலை சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
மேலும் குறித்த வழக்கானது நாளைய(17) தினம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.