விஜயதாச ராஜபக்சவுக்கு எதிராக நீதிமன்றம் தடையுத்தரவு
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்சவும்(Wijeyadasa Rajapakshe), கட்சியின் பதில் பொதுச் செயலாளராக கீர்த்தி உடவத்தவும் செயற்படுவதற்கு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க சமர்ப்பித்த மனுவை பரிசீலித்த கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான இந்த உத்தரவை இன்று(20.05.2024) பிறப்பித்துள்ளார்.
கடந்த மே 16ஆம் திகதி சிறிலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராக அமைச்சர் விஜயதாச ராஜபக்சவும், பதில் பொதுச் செயலாளராக கீர்த்தி உடவத்தவும் செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி, துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்திருந்தது.
தடை உத்தரவு
இதன்படி, அமைச்சர் விஜயதாச ராஜபக்சவை சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும், சட்டத்தரணி கீர்த்தி உடவத்தவை பதில் பொதுச் செயலாளராகவும் நியமிப்பதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தின் மீது கட்சி, அமைப்புக்கள் மற்றும் அதிகாரிகள் செயற்படுவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மறுத்துவிட்டது.
எவ்வாறாயினும், முறைப்பாட்டாளர் தனது முறைப்பாட்டைத் திருத்திக் கொள்ளவும், குறித்த தடை உத்தரவுக்கான உண்மைகளை உறுதிப்படுத்தவும் வாய்ப்பு இருப்பதாக கொழும்பு மாவட்ட நீதிபதி சந்துன் விதான அன்றைய உத்தரவின்போது குறிப்பிட்டிருந்தார்.
இதன்படியே இன்று கொழும்பு மாவட்ட நீதிமன்றினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

viral video: சிறுவனின் மடியில் ஒய்யாரமாக ஓய்வெடுக்கும் ராட்சத மலைப்பாம்பு! மெய்சிலிர்க்கும் காட்சி Manithan

மகாநதி சீரியலில் அடுத்து விஜய்க்கும், வெண்ணிலாவிற்கும் திருமணம் நடக்கப்போகிறதா?.. படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தனக்கு இப்படி நடந்தது எப்படி, அதனை கண்டுபிடித்த ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

Baakiyalakshmi: தூக்கி வீசப்பட்ட மாமனார் புகைப்படம்! சுதாகருக்கு பாக்கியா விடுத்த எச்சரிக்கை Manithan
