குற்றத்தை ஒப்புக்கொண்ட தந்தைக்கு நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
தனது 14 வயது மகளை வன்புணர்வுக்கு உள்ளாக்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட தந்தைக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்துத் கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குற்றவாளி நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் காரணமாக, அவருக்கு எந்தவிதமான அபராதமோ அல்லது நட்டஈடு உத்தரவோ விதிக்கப்படவில்லை.
இந்தச் சம்பவம் 2018ஆம் ஆண்டு டிசம்பர் பாடசாலை விடுமுறையின்போது நிகழ்ந்துள்ளது.
நீதிமன்றத்தில் குற்றவாளியான தந்தை
வீட்டில் வேறு யாரும் இல்லாத நேரத்தில், குற்றவாளியான தந்தை தனது மகளை வன்புணர்வுக்கு உள்ளாக்கி, யாரிடமும் சொல்லக் கூடாது என்று அச்சுறுத்தியுள்ளார்.
மகளின் உடல்நிலையில் மாற்றங்கள் ஏற்பட்டபோது தாய் கண்டுபிடித்ததன் பின்னரே, மகள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து, தந்தைதான் அத்துமீறியதாக மகள் தெரிவித்தார். குழந்தை பிறந்த பின்னர், பாதிக்கப்பட்டவர் 18வயதுக்கு குறைவானவர் என்பதால் மருத்துவமனை அதிகாரிகள் பொலிஸாருக்குத் தகவல் அளித்தனர்.
நீதிமன்றத்தில் குற்றவாளியான தந்தை, மன உளைச்சல் காரணமாகவும், மது போதையின் தாக்கத்திலுமே இந்தச் சம்பவம் நடந்ததாகவும், இது திட்டமிட்ட உள்நோக்கத்துடன் செய்யப்படவில்லை என்றும் கூறி, தனது செயலுக்காக வருத்தம் தெரிவித்து குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்தக் குற்ற ஒப்புதல் காரணமாக, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரஷ்மி சிங்கப்புலி, அவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |