ரணிலின் திடீர் முடிவு - வெளிப்படையாக அறிவிப்பு
தான் தற்போது அரசியலில் ஈடுபடுவதில்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று கண்டியில் மல்வத்த மற்றும் அஸ்கிரி மகாநாயக்க தேரர்களை சந்தித்து ஆசி பெற்றார்.
மகா நாயக்க தேரர்களைச் சந்தித்துவிட்டு, அங்கிருந்து வெளியேறும் போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த முன்னாள் ஜனாதிபதி, தான் தற்போது அரசியலில் ஈடுபடவில்லை என கூறியுள்ளார்.
அரசியல் செயற்பாடு
மகா நாயக்க தேரர்களுடனான சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நீடித்தது. இதன்போது நாட்டின் சமகால அரசியல் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
கலந்துரையாடல் முடிந்து அவர் வெளியேறும்போது, தற்போதைய சட்டமா அதிபரை நீக்குவதற்கான ஏற்பாடுகள் குறித்து ரணிலிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
எனினும் அதற்கு நேரடியான பதிலைக் கொடுக்காமல், தான் அரசியலில் இல்லை என மட்டும் கூறிவிட்டு வெளியேறியுள்ளார். அது பற்றி எனக்கு எதுவும் தெரியாது, நான் அரசாங்கத்தில் இல்லை. நான் இப்போது அரசியலில் இல்லை என அவர் கூறியுள்ளார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு, காலி, மண்டலபுரத்தில் உள்ள ஸ்ரீ மிஹிந்து மகா விகாரையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற ரணில் விக்கிரமசிங்க, நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்க கடமைப்பட்டுள்ளனர் என்பதை வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan