சிறுவனொருவரைச் சித்திரவதை செய்த பொலிஸாருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பதினாறு வயதுக்குக் குறைவான சிறுவனொருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்து கண்களில் மிளகாய்த் தூளைக் கரைத்து ஊற்றி சித்திவதை செய்த பொலிஸாருக்கு உச்சநீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு கண்டி ஹதரலியத்த பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
தங்க நகை திருட்டு சம்பவம் ஒன்றிற்காக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவனொருவரின் கண்களில் மிளகாய்த் தூளைக் கரைத்து ஊற்றி , அடித்து உதைத்து பொலிஸார் சித்திரவதை செய்துள்ளனர்.
இழப்பீடு
இதற்கு எதிராக குறித்த சிறுவனின் பாட்டி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனு தொடர்பில் இன்றைய தினம் உச்சநீதிமன்றம் அதன் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
அதன் பிரகாரம் சிறுவன் சித்திரவதை செய்யப்பட்டமை அப்பட்டமான அடிப்படை உரிமை மீறல் என்று தீர்ப்பளித்துள்ள உச்சநீதிமன்றம், அதற்காக அப்போதைய ஹதரலியத்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியை குற்றவாளி என்று தீர்ப்பளித்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மூன்று லட்சம் ரூபாயும் சிறுவனின் பாட்டிக்கு எழுபத்தி ஐயாயிரம் ரூபாவும் இழப்பீடு செலுத்துமாறும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



