முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மீதான வழக்கு: நீதிமன்ற உத்தரவு
முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை தள்ளுபடி செய்த மேன்முறையீட்டு நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரான விசேட மேன்முறையீட்டை மறுபரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.
மாத்தளையில் 1999ஆம் ஆண்டு நடந்த கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை 2020ஆம் ஆண்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனை எதிர்த்து சட்டமா அதிபரின் விசேட மேன்முறையீட்டை மறுபரிசீலனை செய்ய உயர் நீதிமன்றம் செப்டம்பர் 3ஆம் திகதிக்கு, விசாரணையை ஒத்திவைத்தது.
மோசமான உடல்நிலை
அதன்படி, மூன்று நீதியரசர்கள் கொண்ட குழாம் முன்னிலையில் இந்த மறுபரிசீலனை இடம்பெறவுள்ளது.
ஜனக பண்டார தென்னகோனின் சட்ட ஆலோசகர், நடவடிக்கைகளை ஏற்றுக்கொண்டாலும், முன்னாள் அமைச்சரின் மோசமான உடல்நிலை குறித்து நீதிமன்றத்துக்கு தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





போர் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம்... தயாராக இருக்குமாறு பிரான்ஸ் மருத்துவமனைகளுக்கு உத்தரவு News Lankasri
