அரசாங்கத்துக்கு எதிரான நீதிமன்றத்தின் தீர்மானம்
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை இரத்துச் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிரான நிலைப்பாட்டில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அமைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை இரத்துச் செய்யும் மசோதா ஒன்றை அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. குறித்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மூன்று மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
அவற்றை விசாரித்த உச்சநீதிமன்றம் தனது நிலைப்பாட்டை இரகசிய ஆவணமாக சபாநாயகரிடம் கையளித்துள்ளது.
கருத்துக் கணிப்பு
இந்நிலையில், அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிராகவே உச்சநீதிமன்றத்தின் நிலைப்பாடு அமைந்திருக்கலாம் என்று நம்பகமான தகவல் வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகளை இரத்துச் செய்வதாயின் நாடாளுமன்றத்தில் அதற்கான சட்டம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டு, அதன் பின்னர் பொதுமக்கள் கருத்துக் கணிப்பொன்றும் நடத்தப்பட வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தனது நிலைப்பாட்டை சபாநாயகருக்கு அறிவித்துள்ளதாகவும் மேற்கண்ட தகவல் வட்டாரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





விளாடிமிர் புடின் உட்பட... சீனாவில் ஒன்று கூடும் உலகத்தலைவர்கள்: ட்ரம்பிற்கு புதிய நெருக்கடி News Lankasri

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனுக்காக சூப்பர் சிங்கர் மேடையில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்... வீடியோ இதோ Cineulagam
