புதையல் வேட்டைக்காக பெண் பலியிடப்பட்ட விவகாரம் : அநுர வெளியிட்ட தகவல்
பெண்ணொருவர் பலியிடப்பட்டிருக்கலாம் என்று புலனாய்வாளர்கள் நம்பும் சந்தேகத்துக்குரிய புதையல் வேட்டை சம்பவம் தொடர்பாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவருக்கு எதிராக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு குறித்து உரையாற்றும் போது ஜனாதிபதி இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.
நரபலி தொடர்பான குற்றச்சாட்டுகள்
மேலும் தெரிவிக்கையில், பிரதி பொலிஸ்மா அதிபருடைய மனைவி புதையல் வேட்டைக்குச் சென்றுள்ளார், அதே நேரத்தில் பிரதி பொலிஸ்மா அதிபர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளார்.
இதற்கிடையில், ஒரு சிரேஷ்ட இராணுவ அதிகாரியும் புதையல் வேட்டையில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு பெண் பலியிடப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்துடன் விசாரணைகள் நடந்து வருகின்றன.
கடந்த வாரம், பெலியத்த பொலிஸார் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உட்பட ஐந்து சந்தேக நபர்களை புதையல் வேட்டை குற்றச்சாட்டில் கைது செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
கிராமவாசிகளிடமிருந்து கிடைத்த தகவலின் பேரில், கடந்த 23 ஆம் திகதி தொலஹேனவத்த பகுதியில் இந்தக் குழுவைக் கண்டுபிடித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். எவ்வாறாயினும் நரபலி தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து அதிகாரிகள் இன்னும் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





அபாயகரமான முறையில் குழந்தைகளுடன் கடலுக்குள் இறங்கும் புலம்பெயர்வோர்: பதறவைக்கும் காட்சிகள் News Lankasri
